HEADLINES:
November 19 2019
அனைத்து சமையல் எரிவாயுவுக்கும் மானியம் வழங்க அரசு ஆலோசனை
16 July 2018

புதுடில்லி:எல்.பி.ஜி., சமையல் எரிவாயுவுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் மானியத்தை, பொதுவான, சமையல் எரிவாயு மானியமாக மாற்றுவது குறித்து, 'நிடி ஆயோக்' பரிசீலித்து வருவதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு திட்டங்கள் குறித்து, ஆலோசனை வழங்கும் அமைப்பான, நிடி ஆயோக்கின், துணை தலைவர் ராஜிவ் குமார், இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்.பி.ஜி., சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில், சாண எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. 

மேலும், பல நகரங்களில், குழாய் வழியாக வழங்கப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம், மானியம் வழங்கப்படுவதில்லை.இதன் காரணமாக, எல்.பி.,ஜி., எரிவாயுவில் இருந்து, இயற்கை எரிவாயுவுக்கு மாற, பலர் தயங்குகின்றனர். 

எனவே, மத்திய அரசு வழங்கி வரும் மானியத்தை, எல்.பி.ஜி., எரிவாயுவுக்கு மட்டுமின்றி, மற்ற சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கும் வழங்க, அரசு ஆலோசனை செய்து வருகிறது.எனவே, எல்.பி.ஜி., மானியம் என்பதை, பொதுவான சமையல் எரிவாயு மானியமாக மாற்றுவது குறித்து, நிடி ஆயோக் பரிசீலித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories