HEADLINES:
April 08 2020
காஷ்மீர்: நீர்வீழ்ச்சியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி
16 July 2018

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் திரண்டனர். அவர்கள் அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

 

 

Related Stories