HEADLINES:
November 11 2019
புதுச்சேரி: நியமன எம்எல்ஏ.,க்களுக்கு தடை
16 July 2018

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபைக்குள் நியமன எம்எல்ஏ.,க்கள் 3 பேரையும் அனுமதிக்கக் கூடாது என சபாநாயகர் வைத்தியலிங்கம் உத்தரவிட்டிருந்தார். இதனால் சட்டசபை வளாகத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் தடையை மீறி சட்டசபையைக்குள் செல்வோம் என பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்கள் அறிவித்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் சட்டசபைக்கு வந்த போது , பா.ஜ., நியமன எம்எல்ஏ.,க்கள் 3 பேரையும் சட்டசபை வளாகத்திற்குள் நுழைய விடாமல் வாயில் கதவுகளை மூடி அவை காவலர்கள் தடுத்தினர். தங்களை சட்டசபைக்குள் அனுமதிக்கும்படி அவை காவலர்களுடன், நியமன எம்எல்ஏ.,க்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர்.

நியமன எம்எல்ஏ.,க்களை சட்டசபைக்குள் அனுமதிக்கும்படி சென்னை ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், கோர்ட் உத்தரவு நகரை வைத்து நியமன எம்எல்ஏ.,க்கள் வாக்குவாதம் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

 

 

Related Stories