HEADLINES:
July 05 2020
பிரிட்டன் வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்
10 July 2018

லண்டன்: பிரெக்சிட் விவகாரத்தி்ல் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரீஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததையடுத்து புதிய அமைச்சராக ஜெரமே ஹண்ட் நியமிக்கப்பட்டார். 
ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். 
டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இந்நிலையில், பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை மந்திரியாக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பிரிட்டன் பிரதமர் தெரசா மே அளித்தார.

 

 

Related Stories