HEADLINES:
September 17 2019
சொகுசு ஒட்டல் கட்டும் அகிலேஷ்- டிம்பிள் தம்பதியினர்
06 July 2018

லக்னோ: உ.பி.யில் சொகுசு ஓட்டல் கட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ், இவரது மனைவி டிம்பிள் தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ், இவரது மனைவி டிம்பிள் ஆகியோர் தலைநகர் லக்னோவின் விக்ரமாதித்தியா மாக் என்ற பகுதியில் அரசு பங்களாவை ஆக்கிரமித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பங்களாவை காலி செய்தனர். முன்னதாக அதே பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு 23 ஆயிரம் சதுரடியில் நிலம் வாங்கியிருந்தனர். அந்த நிலத்தில் நட்சத்திர சொகுசு ஓட்டல் கட்டிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக லக்னோ நகர மேம்பாட்டு ஆணையத்திடமும், லக்னோ மாநகராட்சியிடமும் மனு அளித்துள்ளனர். 

 

 

Related Stories