HEADLINES:
September 16 2019
2019 லோக்சபா தேர்தல் நேரத்தில் நிதிஷை பா.ஜ. தூக்கி வீசிவிடும்:தேஜாஸ்வி
06 July 2018

2019 லோக்சபா தேர்தல் நேரத்தில் நிதிஷை பா.ஜ. தூக்கி வீசிவிடும்:தேஜாஸ்வி
பாட்னா: 2019-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் நிதீஷ்குமாரை பா.ஜ. கழற்றிவிடும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த தேஜாஸ்வி யாதவ் கூறினார்.பீஹாரில் முன்னர் ராஷ்ட்ரீய ஜனாத தள கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த நிதீஷ்குமார், திடீரென பா.ஜ.வுடன் கூட்டணி வைத்தார்.இந்நிலையில் பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் நிறுவன நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேஜாஸ்வி யாதவ் கூறியது,
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணியில் உள்ள நிதீஷ்குமாரை பா.ஜ. கழற்றிவிடும். அப்போது நிதீஷ்குமார் ஆட்சி கவிழ்ந்து விடும்.பீஹாரில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றதன் காரணமாகபாலி.லோக் சபாவுக்கும், பீஹார் மாநில சட்டசபைக்கு சேர்ந்து தேர்தல் நடக்கும் அதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும். இனி நிதீஷ்குமாரை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.

 

 

Related Stories