HEADLINES:
September 17 2019
திரிபுராவில் சந்தோஷ அலை : முதல்வர் பிப்லெப் சர்ச்சை பேச்சு
06 July 2018

அகர்தாலா: திரிபுராவில் சந்தோஷ அலை வீசுகிறது என நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சர்ச்சை கருத்து தெரிவித்தார் அம்மாநில பா.ஜ. முதல்வர் பிப்லப் தேப்.திரிபுராவில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக பிப்லெப் தேப் உள்ளார். இவர் பதவியேற்ற நாள் முதல் மகாபாரதத்தில் இன்டர்நெட், ஐஸ்வர்யா ராய் தான் சிறந்த அழகி என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பிரதமர் மோடியே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திரிபுராவில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களது உறுப்புகள் தோண்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் நான்குபேரை பொதுமக்கள் அடித்தே கொன்றனர். இது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.இது குறித்து முதல்வர் பிப்லெப் தேப் அளித்த பேட்டி, திரிபுராவில் சந்தோஷ அலை வீசுகிறது. எனது முகத்தை பாருங்கள் எவ்வளவு சந்தோஷத்தில் உள்ளேன். அந்த சந்தோஷத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டும். இது மக்களின் ஆட்சி அடித்துகொல்லப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார். பிப்லப்பின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related Stories