HEADLINES:
February 27 2020
சமயோசித ரயில் டிரைவருக்குரூ. 5 லட்சம் வெகுமதி
04 July 2018

மும்பை: மும்பையில், அந்தேரி ரயில்வே ஸ்டேஷன் அருகில், நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததில், ரயி்ல் டிரைவர் சமயோசிதமாய் செயல்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அவருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மும்பை அந்தேரி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள நடை மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, ஈரம் காரணமாக நடை மேம்பாலம் வலுவிழந்து இந்த விபத்து ஏற்பட்டது. 
இந்நிலையில் பாலம் இடிந்து விழுவதை, தொலைவிலேயே கவனித்த டிரைவர், உடனடியாக அவசரகால பிரேக்கை போட்டு, ரயிலை நிறுத்தியதால், ஏராளமான பயணிகள் உயிர் தப்பித்தனர். மேலும், உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் ரயில்மீது மின்சாரம் பாய்ந்து, பெருமளவு உயிர்பலி ஏற்பட்டிருக்கும்.இதையெல்லாம் கவனித்த ரயில் ஓட்டுனர் பாலம் இடிந்த இடத்திற்கு முன்பாக ரயிலை நிறுத்தினார். டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தியதால் அவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

 

 

Related Stories