HEADLINES:
December 11 2019
நிர்மலா சீதாராமனை சந்திக்க பிரிட்டன் அமைச்சர் மறுப்பு?
03 July 2018

லண்டன், :இந்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சன் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.லண்டன், பக்கிம்காம்ஷையர் ஆகிய நகரங்களில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை "பிரிட்டன்-இந்தியா வாரம்' கொண்டாடப்பட்டது. இதில் பிரிட்டன் அமைச்சர்கள், இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா, நிடி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அந்த பயணத்தை நிர்மலா சீதாராமன் ரத்து செய்தார்.இதற்கு லண்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவீன் வில்லியம்சன் சந்திக்க மறுத்ததே காரணம் என சண்டே டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக வில்லியம்சனை பிரிட்டன் மூத்த அமைச்சர்கள் சிலர் கண்டித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் நிர்மலா சீதாராமன் டுவிட்டர் பதிவில், "இது அடிப்படை முகாந்திரமில்லாத செய்தி. இருவரும் விரைவில் சந்தித்து பேச உள்ளோம்' என குறிப்பிட்டுள்ளார்.அடுத்த வாரம் இந்த சந்திப்பு நிகழலாம் என்று பிரிட்டன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

 

 

Related Stories