HEADLINES:
December 09 2019
குகைகளில் பெட்ரோல் சேமிக்கும் இந்தியா
28 June 2018

புதுடில்லி: அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக குகைகளில் இரண்டு பெட்ரோல் சேமிப்பு மையங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இங்கு 65 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்களை சேமத்து வைக்க முடியும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஒடிசாவின் சந்திகோல் பகுதியில் 44 லட்சம் டன் கொள்ளவு அவசர கால பெட்ரோலிய பொருட்கள் சேமிப்பு மையமும், கர்நாடகாவின் பதூர் பகுதியில் 25 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட பெட்ரோலிய பொருட்கள் சேமிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 12 நாட்களுக்கு தேவையான டெ்ரோலிய பொருட்களை சேமித்து வைக்க முடியும் என்றார். 
தற்போது, 10 நாட்களுக்கு தேவையான பெட்ரோலிய பொருட்களை சேமித்து வைக்கும், 2 அவசர கால பெட்ரோலிய சேமிப்பு மையங்கள் தென்னிந்தியாவில் உள்ள குகைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 53.3 லட்சம் டன் பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்க முடியும்.


குகைகளில் சேமிப்பு ஏன்:

1990களில் வளைகுடா போரின்போது பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது இந்தியாவின் சேமிப்பில் இருந்த பெட்ரோல், 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அந்த நிலைமை மீண்டும் வரக் கூடாது என்பதற்காக குகைகளில் நிறைய கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகிறது. இது கூட இந்தியாவின் தேவைக்கு 12 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

 

 

Related Stories