HEADLINES:
July 18 2018
நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்: சித்து ஆரூடம்
16 June 2018

அமிர்தசரஸ்: பார்லி. லோக்சபாவிற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பா.ஜ. விரும்புகிறது.. நாட்டின் அடுத்த பிரதமராக காங். தலைவர் ராகுல் வருவார் என முன்னாள் பா.ஜ. எம்.பி. நவ்ஜோத்சிங் சித்து கூறினார்.
பா.ஜ. முன்னாள் எம்.பி.யான நவ்ஜோத்சிங் சித்து பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.வில் இருந்து விலகி காங். கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாப் மாநில சுற்றுலா த்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் பஞ்சாபின் பங்கா, பஹ்வாரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, மத்தியில் ஆளும் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி , பார்லி. லோக்சபாவிற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்புகிறது. அப்படி தேர்தல் அறிவிக்கபட்டால் மதச்சார்பற்ற கட்சிகள் காங்.தலைமையை ஏற்கும், ராகுல் நாட்டின் அடுத்த பிரதமராக வருவார் என்றார்.

 

 

Related Stories