HEADLINES:
June 18 2018
10 ம் வகுப்பு ரிசல்ட் : 94.5 சதவீதம் தேர்ச்சி
23 May 2018

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தேர்ச்சி விகிதங்களையும் வெளியிட்டார். அப்போது அவர், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 94.5 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகம்.

இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.4 சதவீதமாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.5 சதவீதமாகவும் உள்ளது. மொத்தம் உள்ள 5456 அரசு பள்ளிகளில் 1687 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.

 

 

Related Stories