HEADLINES:
June 18 2018
ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்கும் எஸ்.சி., பிரிவினருக்கு ரூ.1 லட்சம்
10 May 2018

பாட்னா: பீஹார் மாநிலத்தில், ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

 

அமைச்சரவை கூட்டம் :

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று முன் தினம்(மே 8) அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று, அடுத்த நிலை தேர்வுக்கு தயாராகும், எஸ்.சி., - எஸ்.டி., எனப்படும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது.

 

ரூ.50 ஆயிரம் :

மேலும், பீஹார் மாநில அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 

மாணவர் விடுதிகளில் தங்கிப் படிக்கும், இந்த சமூகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாயும், தனியார் விடுதிகளில் தங்கிப் படிக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, மாதந்தோறும், 15 கிலோ கோதுமை மற்றும் அரிசியும் வழங்கப்படுகின்றன.

முதல்வரின், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிவில் சேவை ஊக்கத் திட்டத்தின் கீழ், இந்த நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Related Stories