HEADLINES:
June 18 2018
வேகமாக வளர்ச்சியடைகிறது இந்திய பொருளாதாரம்: ஐ.எம். எப்..கணிப்பு
10 May 2018

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துவருவதாக சர்வதேச நிதி ஆணையம் ( I M F) ஆய்வு செய்துள்ளது.சர்வதேச நிதி ஆணையமான ஐ.எம்.எப். 2018-ம் ஆண்டிற்கான ஆசியா - பசிபிக் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி போன்ற பொருளாதார நடவடிக்கைகளின் தாக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. இதையடுத்து இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 2018-19-ம் நிதியாண்டில் 7.8 சதவீதமாக உயரும். இந்தியாவிற்கு அடுத்தபடியாக வங்கதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

Related Stories