HEADLINES:
July 18 2018
கைவிடப்படுகிறதா நெடுவாசல் திட்டம்?
10 May 2018

சென்னை : நெடுவாசல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை 2017 ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 

இதற்கிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு, ஜெம் லெபாரட்டரி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு வழங்கிய குத்தகையை தமிழக அரசு ஜெம் நிறுவனத்திற்கு மாற்றித் தரவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் போராட்டம் மற்றும் வழக்கு காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடத்திற்கு திட்டத்தை மாற்ற உள்ளதால் மாற்று இடம் வழங்கக் கோரி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கும் ஜெம் நிறுவனம் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Related Stories