HEADLINES:
June 18 2018
காவிரி விவகாரம் : பிப்.,23 ல் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்
19 February 2018

சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 23 ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில், சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருந்தார். அப்படி தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டா விட்டால், காவிரி நீர் பிரச்னைக்காக திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 23 ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்., 23 அன்று காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கும் எனவும், இந்த கூட்டத்திற்கு ஆளும் கட்சிகளான அதிமுக மற்றும் பா.ஜ.,வுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories