HEADLINES:
May 26 2018
ஹிமாச்சலில் 'லக்கி பிரைஸ்' யாருக்கு?
19 December 2017

புதுடில்லி: ஹிமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்த போதிலும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர், பிரேம் குமார் துாமல் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். இதையடுத்து, முதல்வர் பதவிக்கு, மூத்த தலைவர்கள் பலர் களமிறங்கி உள்ளனர். 

 

ஹிமாச்சலில், முதல்வராகும் வாய்ப்புள்ள தலைவர்கள்:

ஜே.பி.நட்டா: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான, நட்டா, 57, ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து, ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதல்வர் பதவிக்கு, இவரே, முதல் தேர்வாக இருப்பார் என, கருதப்படுகிறது. பிராமண வகுப்பைச் சேர்ந்த இவருக்கு, ஹிமாச்சல் அரசியலில், நல்ல அனுபவம் உண்டு.

அனுராக் தாக்கூர்: ஹமிர்புர் லோக்சபா தொகுதி, எம்.பி.,யான, அனுராக் தாக்கூர், 43, ஹிமாச்சலில் இருந்து, மூன்று முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்தாண்டு, பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; பா.ஜ., இளைஞர் பிரிவு தலைவராக இருந்துள்ளார்.

அனில் சர்மா: முன்னாள், காங்., அமைச்சர், சுக்ராமின் மகன். சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் ஐக்கியம் ஆனவர். தற்போதைய, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான அமைச்சரவையில், அனில் சர்மா அமைச்சராக இருந்தார்.

நரேந்திர தாக்கூர்: கடந்த, 2003ல், பா.ஜ.,வில் இருந்து விலகிய நரேந்திர தாக்கூர், 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைவர், பிரேம் குமார் துாமலுக்கு எதிராக போட்டியிட்டார். பின், ஹமிர்புர் லோக்சபா தொகுதியில், அனுராக் தாக்கூருக்கு எதிராக போட்டியிட்டு உள்ளார். சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் ஐக்கியமானவர், நரேந்திர தாக்கூர்.

 

 

Related Stories


First        Back       1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20       Next        Last