HEADLINES:
November 12 2018
குஜராத் சட்டசபை தேர்தல்களும், பா.ஜ.,வும்
18 December 2017

ஆமதாபாத் : குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (டிச.,18) வெளியாக உள்ளன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதுவரை வெளியான தகவலின்படி பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.,வே முன்னிலையில் உள்ளது. 
20 ஆண்டு கால ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,க்கும், ஆட்சியை கைப்பற்ற காங்.,க்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் தற்போது வரை பா.ஜ., வின் ஆட்சியே நடந்து வருகிறது. 

குஜராத்தில் 2017 சட்டசபை தேர்தலில் 68.41 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டசபை தேர்தலை விட 3 சதவீதம் குறைவாகும். 


முந்தைய சட்டசபை தேர்தல் விபரம் :


2002 சட்டசபை தேர்தல் :பதிவான ஓட்டு சதவீதம் : 61.54 %கட்சி போட்டி  வெற்றி ஓட்டுகள் சதவீதம்பா.ஜ.,   182  127 1,01,94,353  49.85காங்,   180 51 80,33,104  39.28தே.காங்.,   81  0 3,49,021  1.71

2007 சட்டசபை தேர்தல் : பதிவான ஓட்டு சதவீதம் : 59.77 %
கட்சி போட்டி  வெற்றி ஓட்டுகள் சதவீதம்பா.ஜ.,   182 117 1,07,39,972 49.12காங்,   173  59 83,09,449  38.00தே.காங்.,   10  3  2,30,517  1.05

2012 சட்டசபை தேர்தல் :பதிவான ஓட்டு சதவீதம் : 72.02 %
கட்சி போட்டி  வெற்றி ஓட்டுகள் சதவீதம் பா.ஜ.,   182 115 1,31,19,579  47.85காங்,   176  61 1,06,74,767  38.93தே.காங்.,   12  2  2,59,957  0.95

 

 

Related Stories