HEADLINES:
February 20 2018
இமாச்சலிலும் பா.ஜ., ஆட்சி?
18 December 2017

ஷில்லாங் : குஜராத்தை தொடர்ந்த இமாச்சல பிரதேசத்திலும் பா.ஜ., முன்னிலை வகித்து வருகிறது. இமாச்சலிலும் பா.ஜ., பெரும்பான்மை இடங்களிலும் முன்னிலையில் உள்ளதால், அங்கு பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. 2012 தேர்தலின் போது காங்., இடம் பா.ஜ., ஆட்சியை பறிகொடுத்தது. தற்போது பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், மீண்டும் பா.ஜ., ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளஐ.
இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில், பெரும்பான்மை பெற 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது பா.ஜ., 40 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளதால் பா.ஜ., ஆட்சி உறுதியாகி உள்ளது.

 

 

Related Stories