HEADLINES:
November 13 2018
பெரியபாண்டியன் மரணத்தில் திடீர் திருப்பம் : இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது வழக்கு
17 December 2017

சென்னை : சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலைப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, ராஜஸ்தான் போலீசார் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் சென்ற மற்ற காவலர்களும் காயமடைந்தனர். இந்நிலையில் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


 

 

spaceplay / pause

 

qunload | stop

 

ffullscreen

shift + slower / faster

volume

 

mmute

seek

 

 . seek to previous

12… 6 seek to 10%, 20% … 60%

இன்ஸ் முனிசேகர் மீது வழக்கு

 

ராஜஸ்தான் போலீஸ் அறிக்கை :


இதில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்துள்ளது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கில் இருந்த குண்டு. இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுடப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


முனிசேகர் புகார் :


முன்னதாக முனிசேகர் ராஜஸ்தான் போலீசில் அளித்துள்ள புகாரில், 'நானும், பெரியபாண்டியனும் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அவர்கள் கட்டையால் எங்களைத் தாக்கினார்கள். அப்போது, நான் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். கையிலிருந்த என்னுடைய துப்பாக்கி கீழே விழுந்தது. அதனை பெரியபாண்டியன் தான் எடுத்தார். அப்போது, எங்களுடன் வந்த சக காவலர்கள் உதவியுடன் நாங்கள் வெளியே வந்தோம். எதிர்பாராதவிதமாக பெரியபாண்டியன் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளார். 


முனிசேகர் மீது வழக்கு :


சென்னை கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது அஜாக்ரதையாக செயல்பட்டு பெரியபாண்டியன் உயிர் பிரிய காரணமாக இருந்ததாக முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரியபாண்டியன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Stories