HEADLINES:
May 24 2018
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா? பத்ரா பதில்
17 December 2017

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஒரு பக்கம் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பாக ஆளும்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்துள்ளன.
ஏப்ரல் மாதத்தில் பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. தற்போது மீண்டும் பணப்பட்டுவாடா புகார்கள் குவிந்து வருவதால், மீண்டும் தேர்தல் ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரி பத்ரா நேற்று சென்னை வந்தார்.

தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ரத்து குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. நாளை (இன்று டிச.,17) அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அரசியல் கட்சியினரின் கருத்துக்களை கேட்பதற்கு தான் இந்த ஆலோசனை கூட்டம் என்றார்.

 

 

Related Stories