HEADLINES:
February 25 2018
கவர்னர் செயல்பாடு பற்றி பேசுவது சட்டவிரோதமானது : கவர்னர் மாளிகை
17 December 2017

சென்னை : கவர்னரின் செயல்பாடு பற்றி பேசுவது சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்தின்படியே ஆய்வு நடத்தப்படுவதாகவும் கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவர் கவர்னர் தான். மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது.
ஆனால் அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப்பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன. சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன. நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் கவர்னரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது. அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last