HEADLINES:
August 22 2018
ரூ.100 கோடி பட்டுவாடா: ஸ்டாலின்
17 December 2017

சென்னை: ஆர்கே நகரில் அமைச்சர்கள் மேற்பார்வையில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.100 கோடி அளவுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

ஆலோசனை

தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

 

பணம் விநியோகம்

பின்னர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சி சார்பிலும், ஆளுங்கட்சியிலிருந்து பிரிந்து இன்னொரு அணியின் சார்பில் நிற்கும் வேட்பாளரும் தொகுதியில் என்னென்ன அநியாயங்கள் அக்கிரமங்கள் செய்கிறார்கள் என்பது பற்றி விக்ரம் பத்ராவிடம் புகார் மனுவை திமுக சார்பில் அளித்துள்ளோம். திமுக சார்பில் 20க்கும் மேற்பட்ட புகார்கள் அதிகாரியிடம் வழங்கியுள்ளோம். நேற்று, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அதிமுகவினரை பிடித்து புகார்கள் அளித்துள்ளோம். வாக்காளர்களுக்கு பணம் ஆளுங்கட்சி, தினகரன் அணி சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர்கள் மேற்பார்வை

ரூ.2 கோடி வைத்திருந்த அதிமுகவினரை பிடித்து ஒப்படைத்தால், அது சிலஆயிரம் தான் போலீஸ் சார்பில் செய்தி சொல்லப்படுகிறது. அதை அதிகாரிகளிடம் கூறினால், கண்டும் காணாமல் உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செலவமும், தினகரனும் இணைந்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டுள்ளனர். பட்டப்பகலில் ஒரு வாக்காளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.100 கோடி செலவு செய்யப்படுகிறது. இதனை பகிரங்கமாக சொல்கிறேன்.அமைச்சர்கள் மேற்பார்வையில் பண விநியோகம் நடந்துள்ளது.

 

பணம் விநியோகம் ஏன்

போலீஸ் கமிஷனருக்கு தொடர்பு கொண்டுபேசினோம். பணப்பட்டுவாடா குறித்து டிவியில் செய்தி வெளியிடப்படுகிறது. அப்படி நடக்கிறதா என அவர் எங்களிடம் திருப்பி கேட்கிறார். லக்கானியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிவதில்லை. இப்படிப்பட்ட அக்கிரமங்களுக்கு தேர்தல் கமிஷனும், போலீசும் உறுதுணையாக இருக்கிறது என்பதை ஆதாரமாக தந்துள்ளோம். திமுகவினர் செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாக கொடுத்துள்ளோம். தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போது விநியாகத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் அந்த தைரியதத்தில் ரூ.100 கோடி பணம் கொடுத்துள்ளார்கள். பணம் கொட்டினாலும் குட்டிகரணம் போட்டாலும் ஆளங்கட்சி டெபாசிட் வாங்காது பணப்பட்டுவாடா புகார் தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என சொல்லவில்லை. முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளோம். அவர் கூறினார்.

 

பொய் பிரசாரம்; தம்பிதுரை

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,தோல்வி பயம் காரணமாகவும், மக்களை திசை திருப்பவுமே தேர்தல் நடக்காது என கூறுகின்றனர். எந்த குற்றச்சாட்டுகளையும் ஏற்க வேண்டாம் என தேர்தல் அதிகாரியிடம் கூறியுள்ளோம். அதிமுக கரை வேட்டி கட்டி கொண்டு பொய் பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

பொருள் விநியோகம்; தமிழிசை

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: அத்தனை ஊடகங்களும் எந்தளவிற்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது என்பதை பதிவு செய்துள்ளார்கள். நாங்களும் புகைப்படமாக பதிவு அதிகாரிகளிடம் செய்துள்ளோம். தொகுதியில் ஆயிரகணக்கானோர் விதிகளை மீறி குவிந்துள்ளனர். வாகனங்களை கட்டுப்படுத்த முடிகிறது. ஆயிரகணக்கான மக்கள் வரும்போது கட்டுபடுத்த முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். குடிசை மாற்று வாரியத்திற்கு தலா 50 பேராக குழுவாக கூடி பேசுகின்றனர். குக்கர் போன்ற பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறது. நியாயமாக தேர்தலை நடத்தவில்லை என்றால், தேர்தலை நடத்தி பயனில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

 

வெற்றி எங்களுக்கே: வெற்றிவேல்

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறும்போது: ஆர்கே நகரில் எங்களது ஆதரவாளரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுவது பொய். தினகரனை தோற்கடிக்கவே ரூ.6 ஆயிரம் விநியோகம் செய்யப்படுகிறது. வாக்குபதிவு நேரத்தில் எந்த பிரச்னையும் செய்யாமல் இருந்தால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் பார்வையாளர்கள் சரியாக செயல்பட்டு பண விநியோகத்தை தடுக்க வேண்டும். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories