HEADLINES:
May 26 2018
வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
11 December 2017

புதுடில்லி : டில்லியில் இருந்து ஆமதாபாத் வந்த இண்டிகோ விமானத்தில் காங்., துணைத்தலைவர் சக பயணிகளுடன் வரிசையில் நின்று ஏறிய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல், தனது தாயும் கட்சியின் தலைவருமான சோனியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற, நேற்று (டிசம்பர் 10) காலை டில்லி சென்றார். பின்னர் மீண்டும் டில்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் ஆமதாபாத் திரும்பி உள்ளார்.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ராகுல் வரிசையில் நின்று விமானத்தில் ஏறுவது போன்ற போட்டோவை இண்டிகோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ராகுல் ஏடிஎம்., ஒன்றில் வரிசையில் நின்று பணம் எடுத்த போட்டோ இதே போன்று வைரலாகப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories