HEADLINES:
February 19 2018
ஜி.எஸ்.டி., பாகுபலியை பின்தள்ளிய, 'செக்ஸ்' சாமியார்
06 November 2017

உஜ்ஜெயின்: ம.பி.,யில் நடந்த கழுதை சந்தையில், பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் பெயரிடப்பட்ட கழுதைகள், அதிக விலைக்கு விற்கப்பட்டன.

 

கழுதை சந்தை:


ம.பி., மாநிலம் உஜ்ஜெயினில் ஆண்டுதோறும் நடக்கும் கழுதை சந்தை நடந்தது. கழுதைகள் ஐந்து நாட்கள் நடந்த சந்தையின் கடைசி நாளான நேற்று, 2,000க்கும் மேற்பட்ட கழுதைகள் விற்பனைக்கு வந்தன. இந்த சந்தையில், ஒவ்வொரு ஆண்டும் கழுதைகளுக்கு விதவிதமான பெயர்கள் வைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு சந்தைக்கு வந்த கழுதைகளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படமான பாகுபலி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் போன் சேவையான, ஜியோ உட்பட பல பெயர்கள் வைக்கப்பட்டிருந்தன.

 

பரபரப்பு:


இதில், பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவன், குர்மீத் ராம் ரஹீம் மற்றும் அவனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத் பெயரிடப்பட்ட இரண்டு கழுதைகள், அதிகபட்சமாக, 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி இந்த கழுதைகளை விற்றார்; அதை ராஜஸ்தானைச் சேர்ந்தவர் வாங்கியுள்ளார். ம.பி., மாநிலம் முழுவதும் இது குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.

 

 

Related Stories