HEADLINES:
November 19 2018
ஷாம்பு, பிளாஸ்டிக்கிற்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க திட்டம்!
06 November 2017

புதுடில்லி: மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஷாம்பு, கைகளால் தயாரிக்கப்படும் மரத்திலான பர்னிச்சர்கள், சில பிளாஸ்டிக் பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஒற்றை வரி விதிப்பு முறை:


ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, ஜூலை, 1 முதல் நடைமுறையில் உள்ளது. இந்த ஒற்றை வரி விதிப்பு முறையின்கீழ், பொருட்களுக்கு 5, 12, 18, 28 என்ற விகிதத்தில், வரி விதிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில், ஒவ்வொரு மாதமும் கூடி, இந்த வரி விகிதங்களில் உள்ள பிச்னைகள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதுவரை, 100க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

 

வரி குறைப்பு:

 

இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் அடுத்தக் கூட்டம், வரும், 10ம் தேதி நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஷாம்பு, கைகளால் தயாரிக்கப்படும் மரத்திலான பர்னிச்சர்கள், சில பிளாஸ்டிக் பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தவிர, ஜி.எஸ்.டி., கணக்கை தாக்கல் செய்வது தொடர்பாக வர்த்தகர்கள், வணிகர்களுக்கு சில சலுகைகள் அளிக்கும் வகையில் மாற்றங்களும் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Related Stories