HEADLINES:
November 12 2018
கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி
06 November 2017

சென்னை: சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்திற்கு சென்று சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.




தினத்தந்தி பவளவிழா, மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் திருமண விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில் வருகிறார். இந்நேரத்தில் அவர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டுக்கு பிரதமர் மோடி 12. 30 மணியளவில் செல்லவுள்ளார். 


இத்தகவலை பா.ஜ., தேசிய செயலாளர் முரளிதரராவ் அவரது டுவிட்டரில் கூறியுள்ளார். இந்த சந்திப்பு திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 

 

Related Stories