HEADLINES:
May 26 2018
தள்ளி போகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்
04 November 2017

புதுடில்லி: குஜராத், ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ. பிஸியாக இருப்பதால் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா அல்லது தள்ளி போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. அப்போது ஜி.எஸ்.டி. , பண மதிப்பு இழப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்தாண்டு குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் அது தொடர்பான அறிவிப்பை பார்லி.விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு வெளியிடும். இதில் எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்யப்படும். ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.



இது தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், பொதுவாக பார்லி. கூட்டத்தொடரானது, பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என வருடத்திற்கு மூன்றுமுறை கூட்டவேண்டும் என்பது விதி. அதன்படி இந்தாண்டு நவம்பரில் குளிர்கால கூட்ட தொடரை கூட்ட வேண்டும். தற்போது குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளதால் பிரதமர் மோடி, உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தேர்தல் பிரசார பிசியில் உள்ளனர். எனவே குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் இறுதி வாரத்தில் துவக்கி 10 நாட்களுக்குள் நிறைவு செய்யலாமா அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்தலாமா என ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related Stories