HEADLINES:
November 13 2018
லாலு மகன் தேஜஸ்விக்கு அமலாக்க துறை, 'சம்மன்'
04 November 2017

புதுடில்லி: சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கு விசாரணையில், 13ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, பீஹார் முன்னாள் துணை முதல்வர், தேஜஸ்வி யாதவுக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியுள்ளது.


 

 

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ், 2004ல் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவன சொகுசு ஓட்டல் பராமரிப்பை, தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய, பினாமி பெயரில், பாட்னாவில் உள்ள சொத்துகளை லஞ்சமாக பெற்றதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

 

 


 

 

இது தொடர்பாக, லாலு, அவரது மனைவி, ரப்ரி தேவி, மகன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

இந்த வழக்கை ஆதாரமாக வைத்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும், ரப்ரி தேவி, தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக, ரப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி ஆகியோர், ஏற்கனவே, பல மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

 


 

 

அடுத்தகட்ட விசாரணைகளுக்காக, இருவருக்கும் பல முறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இருக்கின்றனர். இந்நிலையில், 7ல் ஆஜராகும்படி, ரப்ரி தேவிக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், சம்மன் அனுப்பி இருந்தனர். தற்போது, 13ல் ஆஜராகும்படி, தேஜஸ்விக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

Related Stories