HEADLINES:
May 24 2018
6 மாவட்டங்களில் மீண்டும் மழை: 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
04 November 2017

சென்னை: சென்னையில் மீண்டும் பல்வேகு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கடந்த இரு தினங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று (நவ.,3) மாலை 6 மணிக்கு துவங்கிய மழை கனமழையாக மாறியது. 

இதையடுத்து சென்னை அடையாறு , மீனம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், தரமணி, அசோக்நகர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, ராயப்படே்டை, பட்டினம்பாக்கம், நுங்கம் பாக்கம், பிராட்வே, மதுராவயல்,கொளத்தூர் ,பல்லாவரம், நங்கநல்லூர், வேளச்சேரி, அம்பத்தூர் ,கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

திருவள்ளூர் : வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனையடுத்து தமிழகம் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மயைம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் நாகை, திருவள்ளூர்,திருவாரூர், மாவட்டங்களில் மழை பெய்தது.

சென்னையில் மீண்டும் துவங்கிய கனமழையால் சென்ட்ரல் ரயில்வே நூலை வாயிலில் புகுந்த மழைநீர்.படம்.சுரேஷ்கண்ணன்.

 

 

சென்னை மாவட்டம்

 



சென்னையின் கோட்டூர்புரம் ,கொளத்தூர், சைதாப்பேட்டை, நந்தனம், சவுகார் பேட்டை, மயிலாப்பூர்,கிண்டி, ஈக்காட்டுதாங்கள் அசோக்நகர் , போரூர், நுங்கம்பாக்கம், எண்ணூர் , ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பிராட்வே, புரசைவாக்கம், கோயம்பேடு, நாவலூர், மதுராவாயல், பல்லாவரம் ,நங்கநல்லூர், வில்லிவாக்கம்,குன்றத்தூர், திருமுல்லைவாயில், கூடுவாஞ்சேரி, அம்பத்தூர், மடிப்பாக்கம், ராமபுரம், வேளச்சேரி, தரமணி , குரோம்பேட்டை வண்டலூர், ஊரப்பாக்கம் காசிமேடு, நீலாங்கரை ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஆழ்வார்திருநகர், கோட்டூர்புரம், அடையாறு, வேப்பேரி, விருகம்பாக்கம் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிளிலும் மழை பெய்துவருகிறது.

 

திருவள்ளூர் மாவட்டம்

 



திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி , ஆண்டார்குப்பம் , தச்சூர், மீஞ்சூர், பழவேற்காடுஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழைபெய்தது.

 

நாகைமாவட்டம்

 


நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்தது

 

திருவாரூர் மாவட்டம்

 


திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு , மாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

திருச்சி , மணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

தேனி மாவட்டம் போடியில் மழை பெய்தது. 

 

4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

 



கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய 4மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(நவ.4) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்இன்று( நவ.,4 )பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள்,மெட்ரிகுலேஷன்,சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டத்திலும் விடுமுறை

 



திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

 

 

Related Stories