HEADLINES:
February 20 2018
தமிழகத்தில் பரவலாக மழை; தலைஞாயிறில் 27 செ.மீ., பதிவு
04 November 2017

சென்னை: சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார்,தஞ்சாவூர் , திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இன்று(நவ.4) அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது. நாகை தலைஞாயிறில் 27 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யத்தில் 16 செ.மீ., திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 
சென்னையில் கிண்டி, பல்லாவரம்,தாம்பரம்,வண்டலுார் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நாகை: நாகை மாவட்டம்: சீர்காழி, பூம்புகார், வேதாரண்யம், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (நவ.4) காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக 7 வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் கடலுக்குள் செல்லவில்லை.
அரியலுார்: அரியலுார் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

 

Related Stories