HEADLINES:
August 22 2018
கடலோர மாவட்டங்களில் கனமழை; மயிலையில் கொட்டிய 30 செ.மீ.,
03 November 2017

சென்னை: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

 

கனமழை

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி:நேற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.


மயிலையில் 30 செ.மீ., மழை

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகமாக சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

அடுத்து வரும் 24மணி நேரத்தை பொறுத்த வரையில், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.மீனவர்கள், கடற்பகுதிகளில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

சென்னையில்


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் சில முறை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மழை விவரம்:

 

மயிலை டிஜிபி அலுவலகம் -30 செ.மீ.,சத்யபாமா பல்கலை - 20 செ.மீ.,தரமணி -19 செ.மீ.,சென்னை நுங்கம்பாக்கம்- 18 செ.மீ.,பரங்கிப்பேட்டை , மீனம்பாக்கம், சீர்காழி- 14 செ.மீ.,அண்ணா பல்கலை -13 செ.மீ.,தாம்பரம்- 12செ.மீ.,மகாபலிபுரம் -11செ.மீ.,கேவிகே காட்டுகுப்பம், யானைக்காரன் சத்திரம், சோழவரம்- 9செ.மீ.,கோடம்பாக்கம், காரைக்கால்,ரெட்ஹில்ஸ், சிதம்பரம், பொன்னேரி, எண்ணூர், ஸ்ரீவைகுண்டம்- 8செ.மீ.,

 

 

Related Stories