HEADLINES:
February 21 2019
மொபைல் எண் - ஆதார் இணைப்பிற்கு தடை விதிக்க மறுப்பு
03 November 2017

புதுடில்லி: மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

 

 

அச்சுறுத்தல்

 

மொபைல் எண், வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த போது, நீதிபதி சிக்ரி கூறியதாவது: இந்த முடிவை அரசியல் சாசன பெஞ்ச் முடிவுக்கு விடப்படுகிறது. ஆதாரை இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கம் மற்றும் மொபைல் எண் இணைப்பு துண்டிக்கப்படும் என அச்சுறுத்தக்கூடாது எனக்கூறினார்.

 

விளக்கம்

 

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், அதுபோன்ற செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை என விளக்கமளித்தார்.

 

 

கடைசி தேதி

 

அப்போது நீதிபதி கூறுகையில், மீடியாக்கள் இருப்பதால் இதனை கூற வேண்டாம் என நினைத்தேன். ஆனால், எனக்கும் அச்சுறுத்தும் செய்தி வந்ததாக கூறிய நீதிபதி, மொபைல் எண், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதியை சம்பந்தப்பட்ட வங்கிகள், நிறுவனங்கள், மக்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்தியில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

 

 

Related Stories