HEADLINES:
February 25 2018
'மக்கள் இயல்பு வாழ்க்கை மழையால் பாதிக்கவில்லை'
02 November 2017

சென்னை: ''வட கிழக்கு பருவ மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.

டில்லி செல்லும் முன், நேற்று காலை, சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடலாம் என, ஸ்டாலினும், தினகரனும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். எத்தகையை தில்லுமுல்லு செய்தாலும், அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். தினகரன் ஆதரவு, எம்.பி.,க்கள் மூவர் மீது, கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக, நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம்; பார்லிமென்ட் மேலவை முடிவு செய்யும்.

சுனாமி மற்றும் சென்னை வெள்ளத்தை, உலக நாடுகள் பாராட்டும் வகையில் சமாளித்து, வெற்றிகரமாக செயல்பட்டோம். மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அமைச்சர், வேலுமணியின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட, பெருமழை பெய்யும் போது, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Related Stories


First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last