HEADLINES:
May 24 2018
நெல்லையில் சூப்பர் மழை; பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம்
02 November 2017

திருநெல்வேலி: நீண்ட நாட்களுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பல பகுதிகள் மழை நீரில் தத்தளித்தன. நேற்று இரவு முழுவதும் மழை பெய்ததால் இன்று மாவட்டம் முழுவதும பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் மழை இல்லை. நெல்லை பேட்டை, நரிக்குறவர் காலனி பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.




அணைகள் நிரம்புகிறது


 

பெய்து வரும் தொடர் மழையால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; நம்பியாறு அணை நீர்மட்டம், ஒரே நாளில், 9.40 அடி உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. நகரப்பகுதிகளில், நாங்குநேரியில் 24, மி.மீ., ஆலங்குளத்தில் 16.4 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை வரை, அதிகபட்சமாக, நம்பியாறு அணையில், 121மி.மீ., மழை பதிவானது.


பாபநாசம்: 

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 75.02 அடி

நீர் வரத்து : 1015.97 கன அடி

வெளியேற்றம் :504.75 கனஅடி 




சேர்வலாறு :

உச்ச நீர்மட்டம்: 156 அடி

நீர் இருப்பு : 88.78 அடி

நீர்வரத்து :Nil 

வெளியேற்றம்:Nil




மணிமுத்தாறு : 

உச்ச நீர்மட்டம்: 118 அடி

நீர் இருப்பு : 54.09 அடி 

நீர் வரத்து : 473 கன அடி

வெளியேற்றம்: Nil




மழை அளவு


பாபநாசம்: 26 மி.மீ

சேர்வலாறு10 மி.மீ

மணிமுத்தாறு: 41.8 மி.மீ

கடனா: 3 மி.மீ

ராமாநதி: 5 மி.மீ

கருப்பாநதி:35 மி.மீ

குண்டாறு:1 மி.மீ

நம்பியாறு:82 மி.மீ

கொடுமுடி:7 மி.மீ

அடவிநயினார்: 4 மி.மீ

அம்பாசமுத்திரம்:38 மி.மீ

ஆய்குடி:5.2 மி.மீ

சேரன்மகாதேவி:67.2 மி.மீ

நாங்குநேரி: 29 மி.மீ

பாளையங்கோட்டை:134 மி.மீ

ராதாபுரம்:45 மி.மீ

சங்கரன்கோவில்:16 மி.மீ

செங்கோட்டை:3 மி்மீ

சிவகிரி:10 மி.மீ

தென்காசி:4.8 மி.மீ

நெல்லை:94 மி.மீ




மேற்கு தொடர்ச்சி மலை யில் தொடர் மழையால், மணிமுத்தாறு அருவியில், நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.




5 அணைகள் திறப்பு


 

நெல்லை மாவட்டத்தில், பிசான சாகுபடிக்காக, நேற்று ஐந்து அணைகள் திறக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் நீர் ஆதாரமாக விளங்கும் பாபநாசம் அணையில்,ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களிலும்பிசான நெல் சாகுபடிக்கான பணிகள் துவங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ராமநதி அணை, கடனாநதி அணை,அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை மற்றும் கொடுமுடியாறு அணைகள் நேற்று காலையில் திறக்கப்பட்டன.


மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மார்ச் 31 வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழையால், 2,000த்துக்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வருகின்றன.







படகுகள் நாசம்


நெல்லை - கூடங்குளம் அருகே கூத்தன்குழி மீனவ கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் வெள்ள அரிப்பு ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள படகுகள் , மீன்பிடி வலைகள் கடலுக்குள் அரித்து செல்லப்பட்டுள்ளது.

 

 

Related Stories