HEADLINES:
February 21 2019
ரேபரேலியில் ராகுல் ஆறுதல்
02 November 2017

லக்னோ: உ .பி., மாநிலம் அனல் மின் உற்பத்தி கழகத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து காங்., துணை தலைவர் ராகுல் ஆறுதல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டில்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
உ.பி., மாநிலம் பேரபரேலியில் என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல்மின் உற்பத்தி கழகத்தில் பாய்லர் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 100 படுகாயம் அடைந்தனர். அந்த நிறுவனத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 




இந்நிறுவனம் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் உள்ளதால் ராகுல் இன்று அவசரமாக இந்த பகுதிக்கு சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

 

Related Stories