HEADLINES:
May 26 2018
சத்தியமா எங்க ஆட்சிதான் : செல்லூர் ராஜு சபதம்
31 October 2017

கமுதி: ''எத்தனை தேர்தல் வந்தாலும் இனி அ.தி.மு.க., தான்வெற்றி பெறும்,''என,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடந்தஅரசு விழாவில் அமைச்சர் செல்லுார் ராஜு சத்தியம்செய்தார்.
விழாவில் 388 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் நடராஜன் தலைமையிலும், அன்வர்ராஜா எம்.பி., முன்னிலையிலும் நடந்தது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் பேசினர்.

அமைச்சர் செல்லுார் ராஜுபேசியதாவது: மதுரையில்தேவர் சிலையை,முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைத்ததாக முதுகுளத்துார்காங்.,எம்.எல்.ஏ., பாண்டிதவறாககுறிப்பிட்டார். அந்த சிலையை அமைத்தவர் மூக்கையாத்தேவர். முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
ஜெ., முதல்வராக இருந்தபோது, தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேகம் செய்து, தங்க கவசமும் அணிவித்து மகிழ்ந்தார். இந்த அரசை பழனிசாமி சிறப்பாக வழி நடத்துகிறார். மதுரையில் தேவர் சிலைக்குமாலை அணிவித்தஒரேமுதல்வர் இவர் தான். முதல்வராக வேண்டும் என்ற ஸ்டாலின் கனவு, கனவாகவே போய்விடும். இந்தநான்குஆண்டுகள் மட்டுமல்ல; இனி எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க., தான் வெற்றி பெறும்.இது தேவர் மீது சத்தியம், சத்தியம், சத்தியம். இவ்வாறு அவர் பேசினார்.

 

 

Related Stories