HEADLINES:
August 21 2018
படேல் சாதனைகளை மறக்கடிக்க முயற்சி: பிரதமர் பேச்சு
31 October 2017

புதுடில்லி: சர்தார் வல்லபாய் படேல் சாதனைகளை மறக்கடிக்க சிலர் முயற்சி செய்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

ஒற்றுமைக்கான ஓட்டம்


சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. பார்லிமென்ட் அருகேயுள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து டில்லியில் நடந்த "ஒற்றுமைக்கான ஓட்டம்" நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

 

மறக்காத இளைஞர்கள்


பின்னர் மோடி பேசியதாவது: இன்று சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாள். ஒற்றுமைக்கான ஓட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்றதில் பெருமைப்படுகிறேன். சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் சுதந்திரத்திற்கு பின் படேலின் பங்களிப்பு குறித்து பெருமைப்படுகிறேன். படேலின், பங்களிப்பு மற்றும் சாதனைகளை மறக்கடிக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால், இளைஞர்கள் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர். நாட்டை உருவாக்க அவரின் முயற்சியை நினைவுகூர்கின்றனர். இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு. இதனால் பெருமைப்படுகிறது. பல கலாசாரங்கள், வாழ்க்கை முறை, மொழிகளுக்கு இந்தியா தாயகமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

அஞ்சலி


முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சமாதியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

 

 

Related Stories