HEADLINES:
August 21 2018
காஷ்மீரில் என்கவுன்டர்: போலீஸ் அதிகாரி வீரமரணம்
29 October 2017

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள மிர் மொகலா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். இரு தரப்பினருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். லஷ்கர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. அதிகளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related Stories