HEADLINES:
May 24 2018
அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி சிறுவன் பலி
29 October 2017

லக்னோ: உ.பி.,யின் கோண்டா மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஓம்பிகாஷ் ராஜ்பரின் பாதுகாப்பிற்காக சென்ற கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியானான். இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

 

மோதல்


உ.பி., மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோண்டா மாவட்டத்தில், கலனல்கஞ்ச் மற்றும் பரஸ்பூர் எனு்ற பகுதியை இணைக்கும் சாலையில், விஸ்வநாத் என்பரின் மகன் சிவ கோஸ்வாமி(8) நேற்று(அக்.,28) இரவு விளையாடி கொண்டிருந்தான். அப்போது, மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவரின் பாதுகாப்பிற்காக சென்ற கார் சிறுவன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான். கார் நிற்காமல் சென்று விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

 

வேதனை


சிறுவனின் தந்தை விஸ்வநாத் கூறுகையில், கார் மோதி எனது மகன் கீழே விழுந்தான். ஆனால், அமைச்சர் நிற்காமல் சென்று விட்டார். பாதுகாப்பு வாகனங்கள் நின்றாலும் உடனடியாக கிளம்பி விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

 

மறுப்பு


விபத்து நடந்த போது, தான் சம்பவ இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் வேறொரு காரில் இருந்ததாக அமைச்சர் ராஜ்பர் கூறியுள்ளார்.

 

மறியல்


கிராமத்தினர் கூறுகையில், சம்பவம் நடந்ததும் போலீசார் உடனடியாக வரவில்லை. இதனால், சிறுவனின் உடலை போட்டு சாலையை மறித்தோம். இதன் பின்னர் வந்த போலீசார் வலுக்கட்டாயமாக உடலை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பல இடங்களுக்கு தீவைத்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர். 

 

நிவாரணம்


சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து குறித்து போலீஸ் உயர் அதிகாரி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

Related Stories