HEADLINES:
November 13 2018
உலக அமைதிக்காக போராடும் இந்திய ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி பேச்சு
29 October 2017

புதுடில்லி: இந்திய ராணுவ வீரர்கள், நமது எல்லைகளின் பாதுகாப்புக்கு மட்டும் போராடாமல், உலக அமைதிக்காகவும் போராடி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

அதிகரிப்பு


‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தீபாவளி பண்டிகை காலத்தில் டில்லியில் உள்ள காதி கிராம்யோக் கடையில் ரூ.1 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. காதி விற்பனை, கடந்த வருடத்தை விட 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். காதியும், கைத்தறியும், ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துகின்றன.

 

பங்களிப்பு


காஷ்மீரின் குரேஷ் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம். நமது பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் உலக அமைதிக்காகவும் ராணுவ வீரர்கள் போராடுகின்றனர். ஐ.நா., அமைதிப்படையில் இணைந்து உலகத்தில் அமைதியை இந்திய ராணுவ வீரர்கள் கொண்டு வருகின்றனர். உலக அமைதிக்காக நமது ராணுவ வீரர்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஐ.நா அமைதி பணியில் 18 ஆயிரம் வீரர்களின் பங்களிப்பு உள்ளது. தற்போது 7 ஆயிரம் வீரர்கள் இந்த பணியில் உள்ளனர். இந்த படையில் அதிகளவில் ராணுவ வீரர்கள் உள்ள நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

 

பெண்கள் படை



அமைதி நடவடிக்கையில் பெண்களும் முக்கிய பங்களிப்பு உள்ளது. அமைதியைநிலைநாட்டும் பணி எளிதானது அல்ல. பல கடினமான சூழ்நிலையில் இந்த பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. பல கலாசாரத்தை வீரர்கள் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அமைதி நடவடிக்கையில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் 85 நாட்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.
அமைதி ஒற்றுமை, சகோதரத்துவம் என்ற செய்திகளை உலகிற்கு வழங்கிவந்துள்ளது. பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு மகாகவி பாரதியாரின் பங்களிப்பு உள்ளது. இளைஞர்களின் வாழ்க்கை தரம் மற்றும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் யோகா உதவும். இவ்வாறு அவர் பேசினார். 

 

 

Related Stories