HEADLINES:
February 20 2018
தமிழ் இருக்கைக்கு நிதி ஒதுக்கியது ஏன்? : டுவிட்டரில் முதல்வர் விளக்க
28 October 2017

சென்னை : ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. எதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து டுவிட்டரில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில், தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது. திராவிட மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குவது. இலக்கண, இலக்கியங்களை தன்னகத்தே கொண்ட ஏற்றுமிகு மொழி. தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழியின் சிறப்புகளை உலகமெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழுக்கென்று ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சி கல்வியில் தமிழக இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறிய செய்ய வழிவகை ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related Stories